பொத்துவில் அறுபதாம் கட்டை எனப்படும் கனக கிராமத்தில் 1990இல் இடம் பெற்ற யுத்த நிலவரங்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் 2015 ஆம் ஆண்டில் நில மீட்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் . இதன் பயனாக 2021 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தவர்களில் 73 குடும்பங்கள் மட்டும் மீள்குடி அமர அனுமதிக்கப்பட்டனர் .அம்பாறை மாவட்டத்தின் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் பொதுமக்கள் புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் கனகர்கிராமம் துப்புரவு செய்து மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் முதல் கட்டமாக அவுஸ்திரேலிய இன்ஜினியரிங் சொசைட்டி மூலம் பெற்ற நிதியால் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டில்களில் மக்கள் குடியமர அனுமதிக்கப்பட்டனர் .
குடியேறிய மக்களுக்கு குடிநீரானது மிகப்பெரிய பிரச்சனையாக காணப்பட்டது இதனை தீர்க்கும் முகமாக குமுகாய மேம்பாட்டு மன்றத்தின் (SAFE )வழிகாட்டுதலில் ஐக்கிய உலக தமிழியல் நடுவகத்தின் நிதி உதவியுடன் கிணறு ஒன்றும் ஆழ்துளை கிணறு ஒன்றும் அமைத்து கொடுக்கப்பட்டது. அவுஸ்திரேலிய மக்கள் நலன் காப்பகத்தின் 2.3 மில்லியன் நிதி உதவி மூலம் சூரிய மின் கலம் மூலம் செயல்படும் நீர் தாங்கி அமைக்கப்பட்டது இதன் காரணமாக அங்குள்ள மக்களின் நீர் பிரச்சனை ஓரளவுக்கு குறைக்கப்பட்டது .
மேலும் மக்களுக்கான நிரந்தர வீட்டினை அமைக்கும் பணியினை குமுகாய மேம்பாட்டு மன்றம் கிழக்கு (SAFE )அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து ஆறு வீடுகளை அமைக்கும் பணியினை மேற்கொண்டது
கிழக்கு குமுகாயம் மேம்பாட்டு மன்றம்-(SAFE ) கிழக்கு அமைப்பின் முயற்சியின் காரணமாக இலங்கை சோசலிச குடியரசின் நிதி உதவியுடனும் டாக்டர் சதாசிவம் மகேஸ்வரன் நம்பிக்கை நிதியத்தின் நிதி பங்களிப்புடனும் கனகர் கிராமத்தில் கடந்த வருடம் ஆறு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டது
இதன் மொத்த செலவாக ஒரு கோடியே 76 லட்சத்தி 226 ரூபாய் செலவிடப்பட்டது எனினும் இதில் அரசின் நிதியாக 57 லட்சம் கிடைக்கப்பெற்றது ஏனைய நிதியினை டாக்டர் மகேஸ்வரன் நம்பிக்கை நிதியம் வழங்கியது. இதுபோக கனகர் கிராமத்தில் உள்ளக பாதைகள் அமைக்க வேண்டி இருந்தது இதனால் டாக்டர் சதாசிவம் மகேஸ்வரன் நம்பிக்கை நிதியம் 2 கிலோ மீட்டர் நீளமான தற்காலிக பாதைகளை அமைத்து வழங்கியது . இந்த நிலையில் இந்த வீட்டு திட்டமானது இவ்வருடம் பங்குனி மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு , அம்பாறை மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த வருடம் 17 குடும்பங்களுக்கு அரசின் நிதி உதவியுடன் வீட்டினை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு வீ ட்டுக்கும் இரண்டு மில்லியன் வீதம் 17 வீடுகளுக்கு வழங்கப்பட்டுஉள்ளது . இதில் வசதி
குன்றிய எட்டு குடும்பங்களுக்கு வன்னி ஹோப்( Vanni Hope) எனப்படும் அமைப்பு மின் இணைப்புகளை செய்து வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . இந்நிலையில் இது இந்திய அரசின் நிதி அனுசரணையுடன் வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் செய்தியானது உண்மைக்கு புறம்பானது எனவும் இச்செய்தி கனகர்கிராம மீள் குடியேற்ற மக்களின் எதிர்காலத்திற்கு குந்தகமானது எனவும் கனகர் கிராம மீள்குடியேற்றமக்கள் அமைப்பினர் இதனை வன்மையாக கண்டித்து உள்ளனர்
No comments: