News Just In

12/26/2021 02:49:00 PM

சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் விஷேட துஆ பிராத்தனை


சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் விஷேட துஆ பிராத்தனையொன்று இடம்பெற்றது .

நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் 17வது ஆண்டு நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரிப் நிர்வாக சபை இணைந்து ஏற்பாடு செய்த கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டு,விஷேட துஆ பிராத்தனையும் கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இன்று ( 26 -12-2021) காலை இடம்பெற்றது.

இதில் உலமாக்கள் , பள்ளிவாசல் நிர்வாக்தினர்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் .கடந்த 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை அனர்தத்தினால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதி அதிகமான உயிரிழப்புக்களையும் , சேதங்களை சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று முழுமையா நீங்க வேண்டியும் துஆ பிராத்தனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எம் .என் .எம் .அப்ராஸ் 







No comments: