News Just In

12/26/2021 02:29:00 PM

சுனாமி தாக்கத்தின் 17 வது நினைவு தினம்- மட்டு. ஓந்தாச்சிமடத்தில் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு.

ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதனை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாவட்;டத்தில் கொரோனா சுகாதார நடைமுறைகளைப பேணி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன

இம்மாவட்டத்தில் சமார் 1800 பேரை பலிகொண்ட நாவலடி, டச்பார், புதுமுத்துவாரம், திருச்செந்தூர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளில் மெழுகுதிரி ஏற்றி சமய வழிபாடுகள் இடம்பெற்றன.

சுனாமி தாக்கத்தில் உறவுகளை இழந்தவர்கள் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையில் சுனாமித் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நான்காவது மாவட்;டம் மட்டக்களப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாவட்டத்தில் சுனாமித் தாக்கத்தால் 2800க்கும் அதிகமானோர் பலியானதுடன் 650 பேர் காயமடைந்ததுடன் பலர் காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தினர். இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், பிரதேச சபை உறுப்பினர் சற்குணம், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

.எச்.ஹுஸைன் 

No comments: