பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மலையிலிருந்து வீசப்பட்ட இரு பெண் சிசுக்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா நேஸ்பி தோட்ட தேயிலை மலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மலையில் இருந்து இறந்த நிலையில் 2 பெண் சிசுக்களின் சடலங்களை மீட்டதாக் தெரிவித்த நுவரெலியா பொலிஸார் இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிசுக்களின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிசுக்களின் தாயார் தேடி விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும், குறித்த சிசுக்கள் கொலை செய்தே வீசி எறியப்பட்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2/19/2020 12:00:00 PM
மலையிலிருந்து வீசப்பட்ட இரு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: