News Just In

2/19/2020 11:00:00 AM

காத்தான்குடியில் மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை கலந்த பொருட்களை விற்பனை செய்துவந்த மூவரை இன்று (19) காலை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கஞ்சா கலந்த மூக்குத்தூள் உட்பட போதைப் பொருட்களை கைப்பற்றிய பொலிஸார் குறித்த நபர்கள் பாடசாலைகளுக்கு அருகில் மறைந்திருந்து இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments: