News Just In

2/19/2020 10:40:00 AM

ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் சேதமடைந்த சுமார் 1 இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று கண்டியில் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதியின் 'சௌபாக்கியமான நோக்கு' கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக வீதி மற்றும் பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பேராதனை, கலஹா, தெல்தொட்ட, ரிகில்லகஸ்கட வீதிகள் அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆகியோர் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

No comments: