News Just In

2/19/2020 10:17:00 AM

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் பிரதேச கலாசார விழா

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
வருடந்தோறும் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்டு வரும் பிரதேச கலாசார விழா வியாழக்கிழமை 20.02.2020 இடம்பெற ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளரும் பிரதேச கலாசார பேரவையின் தலைவருமான எஸ்.எம். அல் அமீன் தெரிவித்தார்.

அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு ஏறாவூர் அறபா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பமாகி மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் கோலாட்டம், தகரா இசை, பல்குரல் இசை, பக்கீர்பைத், கிராமிய பாடல்கள், நடனம் நாடகம் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளும் பிரதேச கலைஞர் கௌரவம், வாழ்நாள் சாதனையாளர் விருது, பரிசளிப்பு போன்ற இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments: