News Just In

2/19/2020 09:40:00 AM

அரைச் சொகுசு பேருந்துகளின் சேவை நேரத்தில் மாற்றம்!-அறிமுகமாகும் புதிய சட்டம்!!

அரைச் சொகுசு பஸ் சேவை தொடர்பில் பயணிகளின் முறைப்பாடுகளின் அடிப்படையில் அரைச்சொகுசு பஸ் சேவையை முற்றுமுழுதாக தடை செய்வது தொடர்பில்  முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், போக்குவரத்து ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அரைச்சொகுசு பஸ் சேவையை ஒரே நேரத்தில் தடை செய்வது நல்லதல்ல என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதன் அடிப்படையில், அரைச்சொகுசு பஸ்களை இரவு 7.00 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 6.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான புதிய சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானம் எடுத்துள்ளார்.

நேற்று (18) காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் குறித்த தீர்மானம் உட்பட அரைச்சொகுசு பஸ் வண்டிகள் மீது விதிக்கப்படவுள்ள மேலும் பல சட்டங்களுடனான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

No comments: