News Just In

11/02/2026 06:38:00 PM

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு




இலங்கைக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தி தமிழ் மக்கள் வாழ்க்கையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்திய 1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் தொடர்பில் தெரிவுக் குழு ஒன்றை நியமிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவமும் அதன் தாக்கமும் குறித்து முழுமையான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலான தனது யோசனைகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான யோசனை, அங்கீகாரத்திற்காக நாளை (03) செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நவம்பர் 04 புதன்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இலக்கம் 2508/27 மற்றும் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் மற்றும் பரிபூரண மதிப்பீடு ஆகியவை அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன

No comments: