News Just In

10/27/2026 07:31:00 PM

“உதயநிதி கோரிக்கையை ஏற்று ‘ஃபைல்’ ஓபன்...” - அன்பில் கைது குறித்து நிர்மல் குமார் கருத்து


“உதயநிதி கோரிக்கையை ஏற்று ‘ஃபைல்’ ஓபன்...” - அன்பில் கைது குறித்து நிர்மல் குமார் கருத்து



முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், ஊழல் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ‘ஃபைல் ஓபன் பண்ணுங்க’ என உதயநிதி சொல்லிக்கொண்டு இருந்தார். ஒரு ஃபைல்தான் ஓபன் பண்ணி இருக்கிறோம்” என்று தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேனி சிறையில் இருந்த 17 பேர் தப்பியுள்ளனர். அதில் 4 பேர் பிடிபட்டுள்ளனர். தப்பியவர்களை பிடிக்க தேடுதல் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கிறதா என்பது குறித்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஊழல் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பார்டி ஃபண்ட் (கட்சி நிதி) வாங்கியதற்காக ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிக்கிருக்கிறார். இது திமுகவுக்கு பெரிய அவமானம். ஃபைலை ஓபன் செய்யுங்கள் என முன்னாள் துணை முதல்வர் சொல்லிக்கொண்டு இருந்தார். ஒரு ஃபைலை தான் ஓபன் செய்திருக்கிறோம். ஊழல் செய்ததற்கு திமுக வெட்கப்பட வேண்டும்.

நேற்று நீதிமன்றத்தில், கரூரில் போட்டிருக்க வேண்டும் என திமுகவினர் கோஷமிடுகின்றனர். அப்படி என்றால் கரூரில் என்ன திட்டமிட்டனர்? திட்டமிடல் இல்லாமல் அந்த வார்த்தை வந்திருக்காது. அவர்கள் என்ன திட்டமிட்டார்களோ, அவர்களையும் மீறி உணர்ச்சிவசப்பட்டு வெளியே பேசியுள்ளனர்.

2ஜி விவகாரத்தில் எத்தனை பேர் மறைந்தனர், எத்தனை பேர் மாயமாகினர் என அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக் காலத்தில் மாயமானவர்கள் பல பேர். வெட்கமில்லாமல் நாங்கள் பழிவாங்குகிறோம் என ஸ்டாலின் கூறுகிறார். யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது.

முதல்வரிடம் பல ஃபைல்கள் இருக்கின்றன. எங்கெங்கு முறைகேடுகள் நடந்திருக்கிறதோ அங்கெல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.












No comments: