News Just In

11/02/2026 06:46:00 PM

கடவத்தை துப்பாக்கிச் சூடு:சிறுவனின் தாய் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கடவத்தை துப்பாக்கிச் சூடு:சிறுவனின் தாய் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு




கடவத்தை - மஹகடே பிரதேசத்தில் நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டிக்கு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயது சிறுவனின் தாய் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதியை வழங்குமாறு கோரியே இன்று (02.10.2026) அவர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

அதன்பின்னர் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான தனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும் இன்னும் அவரது உடலில் தோட்டாத் துண்டுகள் காணப்படுவதாகவும் அதனால் அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்

No comments: