கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள MEDSCOPE 2026 மருத்துவக் கண்காட்சி, நேற்று (28) மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் மற்றும் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் (Faculty of Health-Care Sciences) முதலாவது பீடாதிபதி (Dean) பேராசிரியர் கே. ஈ. கருணாகரன் (Prof. K. E. Karunakaran) ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இவ் மருத்துவக் கண்காட்சிக்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்னால் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா, கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், காத்தான்குடி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.எம்.ஜாபீர், வைத்திய கலாநிதி காந்தா நிறஞ்சன், கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், முப்படை உயர் அதிகாரிகள், பல்கலைக்கழகத்தின் கல்விசாரா உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
“அறிவியல், புத்தாக்கம் மற்றும் சமூகப் பங்கேற்பின் ஊடாக சுகாதார முன்னேற்றத்தை இணைத்தல்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சி, எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
“அறிவியல், புத்தாக்கம் மற்றும் சமூகப் பங்கேற்பின் ஊடாக சுகாதார முன்னேற்றத்தை இணைத்தல்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சி, எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


No comments: