நாடாளுமன்றத்தில் தெரிந்ததை மட்டும் பேசுங்கள். தேவையற்ற விடயங்களை தவறாகப் பேசவேண்டாம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை வெளிவிவகார அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.
நேற்று (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்தார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் ஜுலபுன் அமோர்ன்விவாட் அழைப்பின் பேரில் செப்டெம்பர் 14 முதல் 16ஆம் திகதி வரை மேற்கொண்ட தாய்லாந்திற்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசியிருந்ததாவது,
அதில்“வெளிநாடொன்றின் துணை பிரதமர், வணிகத்துறை அமைச்சர் ஒருவர் வந்தபோது நீங்கள் யாரும் செல்லவில்லை. லக்ஸ்மன் கதிர்காமரைப் போல் சிறந்த வெளிவிவகார அமைச்சர் இருந்த நாடு இது ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
அவர்களைப் போல் நல்லவர்கள் வாழ்ந்து நாட்டைக் காப்பாற்றிய நாட்டில் இப்போது இன்டர்நெஷனல் எனக் கூறத் தெரியாமல் இருக்கிறார்கள். அனைவரும் சிரிக்கிறார்கள். உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கிறது. எனவே பெரிய இருக்கைகளில் அமரும்போது அதற்கேற்றவாறு நடந்துகொள்ள முயற்சியுங்கள்.
கதிர்காமரைப் போல் பெரியவர்கள் அமர்ந்த இருக்கையில் இருந்துகொண்டு செய்யும் தேவையற்ற வேலைகள் செய்ய வேண்டாம். நாட்டின் பிரதமர் ஒருவர் வந்தபோது எதுவித பாதுகாப்பும் வழங்காமல் முறையற்ற ஒரு வேலை செய்தனர் ” என கூறியிருந்தார்.

No comments: