31ஆம் திகதி மீண்டும் கொந்தளிக்கும் வங்காள விரிகுடா..! இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை
தற்போதைய வானிலை நிலவரத்தால் 3,966 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று(27.10.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தற்போதைய பேரிடர் நிலைமை குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்தபோது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 10 மணி நிலவரப்படி, இந்தத் தகவல் பதிவாகியுள்ளதாகவும், இதனால் அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 14,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.
மோசமான வானிலை
மேலும், மோசமான வானிலை காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 02 வீடுகள் முழுமையாகவும், 312 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், பேரிடர் நிலைமை காரணமாக 181 குடும்பங்களைச் சேர்ந்த 554 பேர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 13 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இன்று(27.10.2026) காலை 10 மணி நிலவரப்படி, 3,966 குடும்பங்கள் பேரிடராலும், 14,485 மக்கள் இந்த வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
4 மாவட்டங்கள் பாதிப்பு
2 வீடுகள் முழுமையாகவும், 312 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. தற்போது, 181 குடும்பங்களைச் சேர்ந்த 554 பேர் 13 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 13 மையங்கள் இரத்தினபுர, கொழும்பு, மன்னார் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அமைந்துள்ளன.
வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளபடி, இந்தப் புயல் அக்டோபர் 28 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் இந்திய நிலப்பரப்பை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இரத்தினபுர, கேகாலை, கண்டி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இராணுவக் குழுக்கள், கடற்படைக் குழுக்கள் மற்றும் பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
10/27/2026 06:56:00 PM
Home
/
Unlabelled
/
31ஆம் திகதி மீண்டும் கொந்தளிக்கும் வங்காள விரிகுடா..! இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை
31ஆம் திகதி மீண்டும் கொந்தளிக்கும் வங்காள விரிகுடா..! இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

No comments: