
New Message Recipients India Refuse to accept the trophy from Mohsin Naqvi: 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து வெற்றி கோப்பை பெற இந்திய அணி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியாவின் மகளிர் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா(59) மற்றும் ஷஃபாலி வர்மா(68) ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் குவித்தது.
ஆனால் 184 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறினர்.
இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 111 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதன் மூலம் 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8 வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இரவு 11.20 மணிக்கு போட்டி நிறைவடைந்தாலும், நீண்ட தாமதத்திற்கு பிறகே நள்ளிரவு 12.05 மணிக்கு பரிசு வழங்கும் விழா தொடங்கப்பட்டது.
அப்போது போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இலங்கை அணி அதற்கான காசோலை மற்றும் பதக்கங்களை வாங்கிக் கொண்டனர்.
ஆனால் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கும் நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டு விழா நிறைவடைந்தது./
இதையடுத்து தெரியவந்த தகவலில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி-யிடம் இருந்து இந்திய மகளிர் அணியினர் தங்களது வெற்றிக் கோப்பையை வாங்க மறுத்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி-யிடம்(Mohsin Naqvi) இருந்து பிசிசிஐ-யின் உத்தரவிற்கு ஏற்பவே இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததாக இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் முஜூம்தார் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சர் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகு, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் வீரர்களை பாராட்டி, அவர்களுக்கு கௌரவங்களை வழங்கினர்.
இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததை அடுத்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வி மைதானத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
No comments: