News Just In

9/12/2026 08:30:00 AM

பலாலியை மத்தளையுடன் ஒப்பிட முடியாது” – பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு.

பலாலியை மத்தளையுடன் ஒப்பிட முடியாது” – பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு.



பலாலியை மத்தளையுடன் ஒப்பிட முடியாது” – பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு. பலாலி–காங்கேசன்துறை அபிவிருத்தி குறித்து அரசாங்கத்திடம் சரமாரிக் கேள்விகள்.


யாழ்ப்பாண விமான நிலையத்தை மத்தள விமான நிலையத்துடன் ஒப்பிடுவதற்கு ஆதரவாக என்ன சாத்தியக்கூறு ஆய்வுகள்,மதிப்பீட்டுத் தேவை முன்னறிவிப்புகள்,வருமான கணிப்புகள் அல்லது செலவு-பயன் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா? என்று அமைச்சரிடம் கேள்வியெழுப்பினேன்.அதேபோல் மத்தள விமான நிலையத்தையும், பலாலி விமான நிலையத்தையும் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன்.

ஓடுபாதையை சீரமைத்தல் மற்றும் முனையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட தற்போதைய விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பாலாலி விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே போதுமான காணிகள் உள்ள நிலையில், தற்போது தேவையில்லாத போது மேலதிக தனியார் காணிகளை அரசாங்கம் ஏன் கையகப்படுத்த முயல்கிறது? பலாலி,மலியிட்டி, வசாவிளான் பகுதி மக்களின் காணிகளை அவர்களுக்கு வழங்காமல், ஓடு பாதை அபிவிருத்தி என்று குறிப்பிட்டுக் கொண்டு பொது மக்களின் காணிகயை ஏன் கையகப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினேன்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வில் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் குறித்து துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரிடம் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் இந்த கேள்விகளை முன்வைத்தேன்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களின் இணைப்புத்தன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாகும். காங்கேசன்துறை துறைமுகத்திற்காக இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளதுடன், அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் வடிவமைப்புகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தொடர்ந்தும் தெளிவற்ற நிலை நிலவுகிறது என்பதை சுட்டிக்காட்டினேன்.

இந்தத் திட்டங்கள் குறித்து அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என்றும், அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு நன்மையளிப்பதாக அமைய வேண்டும் என்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அவர் துறைமுகங்கள் அல்லது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சராக தற்போது பதவி வகிக்காத நிலையில்,எந்த அடிப்படையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார், இமு அரசாங்கத்தின் கொள்கையையா பிரதிபலிக்கிறது என்றும் வினவினேன்.

பாலாலி மற்றும் காங்கேசன்துறை அபிவிருத்திகள் இணைப்புத்தன்மை, சுற்றுலா, வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு நேரடிப் பலன்களை அளிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, இத்திட்டங்கள் மக்களுக்குப் போதுமான பலனைத் தராது எனத் தீர்மானிப்பதற்கு அரசாங்கத்தால் என்ன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது?

யாழ்ப்பாண விமான நிலையத்தை மத்தள விமான நிலையத்துடன் ஒப்பிடுவதற்கு ஆதரவாக என்ன சாத்தியக்கூறு ஆய்வுகள், மதிப்பீட்டுத் தேவை முன்னறிவிப்புகள், வருமான கணிப்புகள் அல்லது செலவு-பயன் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா? என்று அமைச்சரிடம் கேள்வியெழுப்பினேன்.

சுற்றுலா, முதலீடு மற்றும் புலம்பெயர் மக்களின் இணைப்புத்தன்மையைக் சுட்டிக்காட்டி, லண்டன் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளுக்கான யோசனையை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் காரெத் தோமஸ் முன்வைத்துள்ளார். இந்தப் பிரேரணை தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம், விமான நிறுவனங்கள் அல்லது விமான நிலைய அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா? அவ்வாறாயின், பாலாலியில் இத்தகைய சேவைகளை சாத்தியமாக்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் யாவை? அதற்கான காலவகாசம் என்ன?

ஓடுபாதையை சீரமைத்தல் மற்றும் முனையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட தற்போதைய விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பாலாலி விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே போதுமான காணிகள் உள்ள நிலையில், தற்போது தேவையில்லாத போது மேலதிக தனியார் காணிகளை அரசாங்கம் ஏன் கையகப்படுத்த முயல்கிறது? பலாலி, மலியிட்டி,வசாவிளான் பகுதி மக்களின் காணிகளை அவர்களுக்கு வழங்காமல், ஓடு பாதை அபிவிருத்தி என்று குறிப்பிட்டுக் கொண்டு பொது மக்களின் காணிகயை ஏன் கையகப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினேன்.

மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம்,திருகோணமலை துறைமுகம் மற்றும் தலைமன்னார் - இராமேஸ்வரம் படகு சேவை தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம் என்ன? இவை தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுகள், நிதி ஏற்பாடுகள், பங்குதாரர் கலந்துரையாடல்கள் அல்லது காலவகாசம் ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்றும் வினவினேன்.

பலாலி விமான நிலையத்தை மத்தளை விமான நிலையத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஊருக்காகவே மத்தள விமான நிலையத்தை நிர்மாணித்தார்.அதனால் எவ்வித பயனும் நாட்டுக்கு கிடைக்கவில்லை என்பது உண்மையே. ஆகவே பாலாலி விமான நிலையத்தை மத்தள விமான நிலையத்துடன் ஒப்பிட முடியாது. பலாலி விமான நிலையம் வணிக விமான நிலையமாகவும், பயணிகள் விமான நிலையமாகவும் காணப்படுகிறது. ஆகவே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கருத்தை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டேன்.

கொழும்பு உட்பட ஏனைய பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி பணிகள் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.இதற்காகவே இந்த மாகாணங்களின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்திச் செய்யப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாடு ஒன்றினால் 62 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை கொண்டு எவ்வாறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது என்று அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் கடந்த வாரம் துறைமுக அமைச்சில் அபிவிருத்தி பணிகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

அமைச்சர் அநுர கருணாதிலக,

இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு காலவகாசம் கோரிய துறைமுக அமைச்சர் அநுர கருணாதிலக, நான் குறிப்பிட்ட ஒருசில விடயங்களை ஏற்க முடியாது என்றார்.இதற்கு பதிலளித்து, எனது தனிப்பட்ட நிலைப்பாட்டை நான் குறிப்பிடவில்லை. ஊடகங்களில் வெளியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டேன் என்றார்.

அமைச்சர் சந்திரசேகர்.

இதன்போது எழுந்து கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க வடக்குக்கு வந்த போது நானும் அவருடன் இருந்தேன், யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது, பலாலி மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாது என்று குறிப்பிடவில்லை. பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

No comments: