News Just In

9/11/2026 02:29:00 PM

கோலாகலமாக நடைபெற்ற “Women’s Excellence and Power of Women Iconic Award 2026” பட்டமளிப்பு விழா : 60 யுவதிகளுக்கு டிப்ளோமா மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு

கோலாகலமாக நடைபெற்ற “Women’s Excellence and Power of Women Iconic Award 2026” பட்டமளிப்பு விழா : 60 யுவதிகளுக்கு டிப்ளோமா மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு



நூருல் ஹுதா உமர், அக்ரம் லுதுபி

சுரைஃபா பிரைடல்ஸ் ஹேர் அண்ட் பியூட்டி சலூன் அகடமியின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட “Women’s Excellence and Power of Women Iconic Award 2026” விருது வழங்கும் மற்றும் பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) வெகு விமர்சையாக நடைபெற்றது.

சுரைஃபா பிரைடல்ஸ் ஹேர் அண்ட் பியூட்டி சலூன் அகடமியின் முகாமையாளரும், தேசமான்ய, தேச அபிமானிய ஜனரஞ்சன விருது பெற்றவருமான டொக்டர் சுரய்ஃபா ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரபல நடிகையும் பாடகியுமான சியாமலா சண்முகராஜ் பிரதம அதிதியாகவும், Salon Shalook முகாமையாளர் சாரா சிராஜ் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, Hair & Beauty, Mehendi, Fashion Design மற்றும் Beautician உள்ளிட்ட பல்வேறு சுயதொழில் சார்ந்த கற்கைநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 60 யுவதிகளுக்கு டிப்ளோமா பட்டங்களும் சான்றிதழ்களும் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

பெண்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை சுயதொழில் மற்றும் பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த 17 வருடங்களாக சுரைஃபா பிரைடல்ஸ் ஹேர் அண்ட் பியூட்டி சலூன் அகடமி பல்வேறு பயிற்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதுவரை இவ்வகடமியின் ஊடாக 2,000-க்கும் மேற்பட்ட யுவதிகள் டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுள்ளதுடன், அவர்களில் பலர் தமது சொந்த தொழில் முயற்சிகளை ஆரம்பித்து பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

அத்துடன், இங்கு பயிற்சி பெற்ற பலர் வெளிநாடுகளிலும் பணியாற்றி வருவதுடன், பல்வேறு நிறுவனங்களில் உயரிய பதவிகளையும் வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

பெண்களின் திறமை, ஆற்றல் மற்றும் தொழில்முனைவுத் திறனை சமூகத்தின் முன்னேற்றத்துடன் இணைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, இளம் தலைமுறை யுவதிகளுக்கு புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்கும் நிகழ்வாக அமைந்தது.

இந்நிகழ்வில் பட்டம் பெற்ற மாணவிகள், அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள், அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments: