News Just In

9/11/2026 05:33:00 AM

இனவாத விசமிக்கு மைத்திரிபால கொடுத்த பொதுமன்னிப்பு செல்லாது..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இனவாத விசமிக்கு மைத்திரிபால கொடுத்த பொதுமன்னிப்பு செல்லாது..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.

இந்நிலையில், குறித்த பொதுமன்னிப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் விதித்துள்ள அதிரடி தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.

No comments: