
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அத்துடன் அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் வாசுதேவ சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற முடியும்.
மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாதாரண சட்ட நடைமுறையாகும்.
எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை. அந்தவகையில், நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும் காணவில்லை.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரன் கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும் என்றார்.
No comments: