News Just In

9/02/2026 06:31:00 PM

விகாரைக்குள் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வைத்தியசாலையில் அனுமதி

விகாரைக்குள் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வைத்தியசாலையில் அனுமதி


அடையாளம் தெரியாத நபர்களால் ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதிச்சடங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்காக பல விசேட பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: