News Just In

9/05/2026 12:12:00 PM

கனடாவின் ஒன்ராறியோவின் மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்

கனடாவின் ஒன்ராறியோவின் மூன்று  தொகுதிகளில் இடைத்தேர்தல்


ஒன்ராறியோ மாகாணத்தில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று இரவு நிறைவடைந்துள்ளது.

வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தபோது, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற நீண்டகால மாகாணப் பிரச்சினைகள் குறித்து மக்கள் அதிகம் பேசினர் என தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் வர்த்தகப் போரும் வாக்காளர்களிடையே முக்கிய கவலையாக இருந்துள்ளது.

ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டின் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டு தொகுதிகளைத் தக்கவைத்துக்கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது. அதேசமயம், புதிய ஜனநாயகக் கட்சி மூன்றாவது தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.

கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நீல் லம்ஸ்டன் ஓகஸ்ட் மாதம் பதவி விலகியமையை தொடர்ந்து, ஹாமில்டன்–ஸ்டோனி க்ரீக் தொகுதியில் கடும் போட்டி நிலவும் என வேட்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

No comments: