News Just In

9/05/2026 12:09:00 PM

இன்று வந்தாறுமூலை கிழக்குபல்கலைக்கழக இனப்படுகொலை -36, வது ஆண்டு நினைவு நாள் !

இன்று வந்தாறுமூலை கிழக்குபல்கலைக்கழக இனப்படுகொலை -36, வது ஆண்டு நினைவு நாள் 



கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள்என்பது 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்தஞ்சமடைந்திருந்த தமிழ் மக்கள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டு அவர்களை வாகனங்களில் ஏற்றிச்சென்று பின்னர் படுகொலை செய்யப்பட்ட கொடுரம் ஜனாதிபதி ஆர் பிரமதாசா ஆட்சிக்காலம் நடந்தது.

அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தது. விசாரணை முடிவுகள் சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனங்கண்டிருந்தது, ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை..

1990, ல் நடந்த தமிழினப்படுகொலைகள இலங்கை இராணுவத்துடன் முஸ்லிம்  ஊர்காவல் படையினரும் சம்மந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 05/09/2026,  ஆண்டுகள்36 கடந்தும் ,  இந்த இனப்படுகொலை நடந்தும் இதுவரை அந்த கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை,

அந்த 158, தமிழர்களும் எங்கு புதைக்கப்பட்டார்கள் என்பது கூட இதுவரை தெரியாத நிலையில் அந்த நினைவு நாள் மட்டும் நினைவு கூரப்படுகிறது.

No comments: