ரணில் மற்றும் நாமலின் வழக்குகள்...! இன்று நீதிமன்றத்தில் என்ன நடக்கப் போகிறது? பரபரப்பில் கொழும்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பான முக்கிய வழக்குகள் இன்று நீதிமன்றங்களில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தனது மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றபோது அரசாங்கத்திற்கு 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பான வழக்கும் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான முதற்கட்ட தகவல் அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
அதேவேளை, சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாமல் ராஜபக்ச தொடர்பான முக்கிய வழக்குகள் இன்று நீதிமன்றங்களில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளன
No comments: