News Just In

9/30/2026 10:41:00 AM

எயார்பஸ் விவகாரம் : இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள நாமல்

எயார்பஸ் விவகாரம் : இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள நாமல்



எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் வழக்கு, இன்று (30) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

அதற்கமைய நாமல் ராஜபக்ச இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான முதற்கட்ட தகவல் அறிக்கையை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  (25) நீதிமன்ற அமர்வின்போது சமர்ப்பித்தது.

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (29) உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பரிவர்த்தனை தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நான்காவது சந்தேகநபராக நாமல் ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (29) உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: