News Just In

9/25/2026 10:56:00 AM

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டியில் மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்த கணவன்

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டிப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று வியாழக்கிழமை (24) சந்திவெளி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சித்தாண்டிப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணாவார்.

குடும்ப தகராறு காரணமாகக் கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்தப்பட்டே இக் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக் குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,சம்பவம் தொடர்பில் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments: