News Just In

9/25/2026 10:52:00 AM

FCID முன் ஆஜராகாத ஷிராந்தி ராஜபக்ஷ – சிங்கப்பூரில் சிகிச்சை என விளக்கம்

FCID முன் ஆஜராகாத ஷிராந்தி ராஜபக்ஷ – சிங்கப்பூரில் சிகிச்சை என விளக்கம்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) முன் நேற்று ஆஜராகத் தவறினார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

'சிறிலிய சவியா' நிதியத்தின் கணக்கு தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் குறித்த தொடர் விசாரணைகளுக்காக, அவரை நேற்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தான் தற்போது சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், விசாரணைக்கு ஆஜராக வேறொரு மாற்றுத் தேதியை வழங்குமாறு அவரது தரப்பிலிருந்து பொலிஸாருக்கு எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: