
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நாடாளுமன்றத்தின் பல அதிகாரிகள் இன்று(03.09.2026) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், விளக்கமளிப்பதற்காக குறித்த அதிகாரிகள் CIABOC முன்னிலையாகியுள்ளனர்.
விசாரணைக்கு தேவையான ஆவணங்கள்
குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் நாடாளுமன்ற அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் CIABOC மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
No comments: