News Just In

9/08/2026 11:17:00 AM

மட்டக்களப்பில் தொடரும் வனஇலாகா திணைக்களத்தின் அடாவடி!

மட்டக்களப்பில் தொடரும் வனஇலாகா திணைக்களத்தின் அடாவடி!



 பிரதேசசெயலாளர்பிரிவுக்குட்பட்ட தோணிதாட்டமடு ( மட்டக்களப்பின்எல்லை) எனும் பகுதியில் 6திகதி  பிற்பகல் 2.30 மணியளவில் அத்திணைக்களத்திற்கு சொந்தமான வாகனத்தில் வந்த ஐந்து பேர் அக்கிராமத்தின் இரண்டு வீடுகளுக்கு சென்று எந்தவித அனுமதியிமின்றி பெண்பிள்ளைகள் உள்ள வீட்டில் பரிசோதனை செய்து வீட்டில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருப்பதாக கூறி வீட்டை பரிசோதித்து வீட்டிலுள்ள பொருட்களை அலங்கோலப்படுத்தியுள்ளனர்.

அதனை வீட்டு உரிமையாளர்கள் தடுக்க முற்பட்டு காணொளி பதிவு செய்ய முயன்றபோது கைத்தொலைபேசியை பறித்து வீட்டுக்கான ஒப்பத்தையும் கேட்டுள்னர்.

இந்த அடாவடிச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் அவர்களின் மக்கள் முறையிட்டதற்கு இணங்க உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் வீட்டினை பார்வையிட்டு வீட்டு உரிமையாளர்களோடு கலந்தரையாடி நாளை சட்டநடவடிக்கை மேற்கொள்ள உதவிசெய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

No comments: