News Just In

9/25/2026 05:11:00 PM

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் சோலைவரி அறவிடும் காத்தான்குடி நகரசபை!

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் சோலைவரி அறவிடும் காத்தான்குடி நகரசபை!எல்லை மீறும் சபைகளின் வரி வசூலை உடனடியாகத் தடுக்க வேண்டும் –நாடாளுமன்றத்தில் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தல்.


உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம், நிதி சுயாதீனம், வரி வசூல்,
உபசட்டங்களின் அங்கீகாரம் மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட
பிரதிநிதிகளின் அதிகாரப் பாதுகாப்பு தொடர்பில் விரிவான கேள்விகள்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்அவர்களினால் பாராளுமன்றத்தில், உள்ளூராட்சி மன்றங்கள் வெறுமனே குப்பைகளைஅகற்றுவதற்கும் அடிப்படைச் சேவைகளை வழங்குவதற்குமான நிறுவனங்கள் அல்ல
எனத் தெரிவித்ததுடன், அவை ஒழுங்குமுறைகளை உருவாக்குதல், உபசட்டங்களைஇயற்றுதல் மற்றும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நிர்வாக நடவடிக்கைகளைமுன்னெடுத்தல் போன்ற பொறுப்புகளைக் கொண்ட ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் என நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

எனினும், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களும் வருமானத்தை
உருவாக்குவதற்கான வழிமுறைகளும் போதுமான அளவில் புதுப்பிக்கப்படாத
நிலையில், பல உள்ளூராட்சி மன்றங்கள் கடுமையான நிதி மற்றும் உட்கட்டமைப்புநெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், பொது
நிர்வாக அமைச்சரிடம் நிலையியல் கட்டளை 27/2 பிரிவின் கீழ் வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்களில் உள்ள மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேசசபைகளின் நிர்வாகம், நிதி ஒதுக்கீடுகள், வரி வசூல், உபசட்டங்களின்
அங்கீகாரம், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மற்றும் மக்களால்
தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பங்கு தொடர்பில் சாணக்கியன்
இராசமாணிக்கம் தொடர்ச்சியான கேள்விகளை முன்வைத்தார்.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் கேள்விவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது எத்தனை மாநகர சபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் இயங்கி வருகின்றன என்றும், அவைஒவ்வொன்றையும் எந்தக் கட்சி அல்லது குழு நிர்வகித்து வருகின்றது என்றும்சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், குறித்த உள்ளூராட்சி மன்றங்கள் தங்களுடைய சொந்த
வருமானத்திலிருந்து ஊழியர்களின் சம்பளங்களைச் செலுத்த வேண்டிய சதவீதம்எவ்வளவு என்றும், 2029ஆம் ஆண்டு வரை அந்தச் சதவீதத்தை அதிகரிப்பதற்காகஎத்தகைய திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்றும் அவர்கேள்விக்குட்படுத்தினார்.

இந்த அதிகரிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனையின்
அடிப்படையிலானதா என்பதையும் அவர் அமைச்சரிடம் விளக்கம் கோரினார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்த சாணக்கியன் இராசமாணிக்கம், சில உள்ளூராட்சிமன்றங்கள் தற்போது தங்களுடைய சொந்த வருமானத்திலிருந்து 20 வீதம் மற்றும்40 வீதம் வரையிலான சம்பளச் செலவுகளை மேற்கொண்டு வருவதாகவும், 2029ஆம்ஆண்டளவில் ஊழியர்களின் முழுமையான சம்பளச் செலவையும் அந்தந்த உள்ளூராட்சிமன்றங்களின்சொந்தவருமானத்திலிருந்து செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்எனக் கூறப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை எனக் கூறப்பட்டாலும், தாம்
அறிந்தவரையில் அது IMF இன் நிபந்தனை அல்ல எனத் தெரிவித்த அவர், போதியவருமானத்தை உருவாக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்கள் இவ்வாறானநடைமுறையினால் எதிர்காலத்தில் இயங்க முடியாத நிலையை எதிர்கொள்ள நேரிடும்என எச்சரித்தார்.

மத்திய மற்றும் மாகாண அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விபரம் கோரல்

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் மத்திய மற்றும் மாகாண அபிவிருத்தி நிதி
ஒதுக்கீடுகளின் கீழ் ஒவ்வொரு மாகாணத்திற்கும் எவ்வளவு தொகை மற்றும்
எத்தனை சதவீதம் சென்றடைந்துள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும்சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்தார். மேலும், வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொருஉள்ளூராட்சி மன்றத்திற்கும் சென்றடைந்த அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள்தொடர்பான முழுமையான விபரங்களையும் அவர் கேட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில்ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் வழங்கப்பட்ட வாகனங்கள் மற்றும்இயந்திர உபகரணங்கள் எவை, அவை எந்த மூலங்களிலிருந்து வழங்கப்பட்டன,அவற்றின் பெறுமதி எவ்வளவு என்பதையும் அவர் கேள்விக்குட்படுத்தினார்.உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளுக்கு வாகனங்கள் மற்றும் இயந்திரஉபகரணங்கள் முக்கியமானவையாக இருப்பதால், அவற்றின் விநியோகம் மற்றும்
பயன்பாடு தொடர்பில் வெளிப்படைத்தன்மை அவசியம் என அவர்
சுட்டிக்காட்டினார்.

வரிகள், வாடகைகள், உரிமக் கட்டணங்கள் மற்றும் அபராதத் தொகைகள் தொடர்பில் விளக்கம்

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்தினாலும்
மதிப்பிடப்பட்டு வசூலிக்கப்பட்ட வரிகள், சொத்து வரிகள், வாடகைகள், உரிமக்கட்டணங்கள், அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் மற்றும் தண்டப்பணங்கள் தொடர்பானமுழுமையான விபரங்களையும் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரினார்.அத்துடன், குறித்த வரிகள் மற்றும் கட்டணங்களில் எத்தனை சதவீதம்நிலுவையில் உள்ளது என்பதையும், பெருமளவிலான நிலுவைத் தொகைகளைவைத்திருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கத்தினால்வழங்கப்படும் சட்ட உதவி என்ன வகையில் அமைந்துள்ளது என்பதையும் அவர்கேள்வி எழுப்பினார்.

மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் விதிக்கக்கூடிய
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரிகள், உரிமக் கட்டணங்கள்,
அனுமதிப்பத்திரக் கட்டணங்கள், தெருவோர விற்பனை மற்றும் சந்தைக்
கட்டணங்கள், அபராதங்கள் உள்ளிட்ட ஏனைய கட்டணங்கள் எவ்வளவு என்பதையும்அவர் கேட்டறிய விரும்பினார்.
மேலும், குறித்த கட்டணங்கள் இறுதியாக எப்போது திருத்தப்பட்டன, ஒவ்வொருபிரிவிலும் விதிக்கக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகை எவ்வளவு, தற்போதையபொருளாதார மற்றும் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப அவற்றை நவீனமயப்படுத்திஅவ்வப்போது புதுப்பிப்பதற்காக எத்தகைய திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளனஎன்பதையும் அவர் கேள்விக்குட்படுத்தினார்.

காலத்துக்கு ஏற்ற வகையில் அபராதத் தொகைகள் புதுப்பிக்கப்பட வேண்டும்

உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறையில் உள்ள பல அபராதத் தொகைகள் மற்றும்உரிமக் கட்டணங்கள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை எனச் சாணக்கியன்இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பிரதேச சபைகள் மற்றும் நகரசபைகளில் சில உரிமங்களை வழங்குவதற்கான கட்டணங்கள் சட்டத்தின் கீழ் 5,000ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரையிலேயே காணப்படுவதாகவும், சாதாரணஅபராதங்களாக 100 ரூபாய், 150 ரூபாய் அல்லது 500 ரூபாய் போன்ற குறைந்ததொகைகளே விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பல வருடங்களாக இவ்வாறானஅபராதங்கள் மற்றும் ஏனைய கட்டணங்கள் புதுப்பிக்கப்படாமல் இருப்பதால்,
விதிமுறைகளை மீறுபவர்களைத் தடுப்பதற்கான செயற்பாடுகள் பலவீனமடைவதாகவும்அவர் குறிப்பிட்டார். எனவே, உள்ளூராட்சி மன்றங்கள் விதிக்கக்கூடியவரிகள், உரிமக் கட்டணங்கள், அனுமதிப்பத்திரக் கட்டணங்கள், சந்தைக்கட்டணங்கள் மற்றும் அபராதத் தொகைகள் ஆகியவை தற்போதைய பொருளாதாரநிலைமைக்கும் நடைமுறைத் தேவைகளுக்கும் ஏற்ப நவீனமயப்படுத்தப்பட வேண்டும்
என்றும், அவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீளாய்வு செய்யப்பட்டு
புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிர்வாக எல்லைகளுக்கு அப்பால் வரி வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றங்கள் தங்களுடைய வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட
நிர்வாக எல்லைகளுக்கு அப்பால் சொத்துக்களை மதிப்பீடு செய்தல், வரிகளை
வசூலித்தல் அல்லது உரிமங்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில்
ஈடுபடுகின்றனவா என்றும், அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால் அவற்றைத்தடுப்பதற்காக என்ன நடைமுறைகள் அமுல்படுத்தப்பட உள்ளன என்றும் சாணக்கியன்இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
இந்த விடயத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், மட்டக்களப்பு மாநகர
சபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் வட்டாரத்தில் அயல் உள்ளூராட்சி
மன்றத்தினால் வரி மதிப்பீடு மற்றும் வசூல் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, காத்தான்குடி நகர
சபையானது மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் வட்டாரத்தில்பல்வேறு கட்டணங்களை அறவிட்டு, சொத்து வரி வசூல் நடவடிக்கைகளில்ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்குஉரிய தகவல் வழங்கப்படாமல், அயல் உள்ளூராட்சி மன்றத்திலிருந்து வந்துஇவ்வாறான வரி வசூல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகள் நிர்வாக எல்லைகள் தொடர்பில் குழப்பத்தை
ஏற்படுத்துவதுடன், இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் உருவாகக்கூடிய
சூழ்நிலையையும் ஏற்படுத்தலாம் என சாணக்கியன் இராசமாணிக்கம் எச்சரித்தார்.எனவே, ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் நிர்வாக எல்லைக்குள் மற்றொருஉள்ளூராட்சி மன்றம் தன்னிச்சையாக வரி வசூல் அல்லது கட்டண அறவீடு செய்யும்நடவடிக்கைகள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொருஉள்ளூராட்சி மன்றத்தின் நிர்வாக எல்லைகளும் அதிகாரங்களும் உரிய முறையில்மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உபசட்டங்கள் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் சுட்டிக்காட்டு

கடந்த பத்து ஆண்டுகளில் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச
சபைகளால் எத்தனை உபசட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன அல்லது
புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றில் எத்தனை உபசட்டங்கள் இன்னும்
அங்கீகரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன என்றும் சாணக்கியன் இராசமாணிக்கம்கேள்வி எழுப்பினார். மேலும், ஒவ்வொரு வகையான உள்ளூராட்சி மன்றங்களும்உபசட்டங்களை உருவாக்குதல், அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும்வர்த்தமானியில் வெளியிடுதல் ஆகியவற்றுக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
என்ன என்பதையும் அவர் கேட்டார். தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைகள் தற்போது செயற்பாட்டில் இல்லாத நிலையில், உபசட்டங்களைஅங்கீகரிக்கும் செயற்பாட்டில் ஆளுநரின் பங்கு என்ன என்பதையும், இந்தநடைமுறையில் எத்தகைய சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்பதையும்அவர் கேள்விக்குட்படுத்தினார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ஒருமாநகர சபை உபசட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாகாண சபை செயற்பாட்டில் இருக்க
வேண்டிய நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டிலிருந்து மாகாண சபைகள் செயற்பாட்டில் இல்லாத காரணத்தினால்,2018ஆம் ஆண்டிலிருந்து மாநகர சபைகளால் உருவாக்கப்பட்ட பல உபசட்டங்கள்இதுவரை அங்கீகரிக்கப்படாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோன்று,
பிரதேச சபைகளும் பல உபசட்டங்களை உருவாக்கியுள்ள போதிலும், அவற்றுக்குஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட வேண்டிய நிலை காணப்படுவதால், அவைநடைமுறைக்கு வராமல் இருப்பதாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம்சுட்டிக்காட்டினார்.உள்ளூராட்சி மன்றங்கள் வெறுமனே குப்பைகளை அகற்றும்நிறுவனங்கள் அல்ல என்றும், அவை ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கும்உபசட்டங்களை இயற்றுவதற்கும் அதிகாரம் கொண்ட ஜனநாயக நிறுவனங்கள் என்றும்
அவர் வலியுறுத்தினார். எனவே, உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கும்
உபசட்டங்கள் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வருவதற்குத்தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கோரிக்கை விடுத்தார்.

LLDF நிதியுதவி மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்கள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள
ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றமும் LLDF நிதியுதவியின் கீழ் எவ்வளவு நிதியைப்பெற்றுள்ளன என்பதையும் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான
திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் எதிர்காலத்தில் மேலும்
விரிவுபடுத்தப்படுமா என்றும் அவர் கேட்டறிந்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய பல்வேறு திட்ட
முன்மொழிவுகள் LLDF கடன் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு
சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கு இதுவரை உரிய அங்கீகாரம்
வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றங்கள் தங்களுடைய சொந்த வருமானத்தை அதிகரித்து நிதிரீதியாக வலுப்பெறுவதற்கு இத்திட்டங்கள் முக்கியமானவையாக இருப்பதால்,அவற்றை பரிசீலித்து உடனடியாக அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளாக தரம் உயர்த்தும் முன்மொழிவுகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகள் நகர சபைகளாகவும்,
ஏற்கனவே உள்ள நகர சபைகள் மாநகர சபைகளாகவும் தரம் உயர்த்தப்பட வேண்டும்என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக சாணக்கியன் இராசமாணிக்கம்தெரிவித்தார்.

அவ்வாறு நகர சபைகளாக அல்லது மாநகர சபைகளாக தரம் உயர்த்துவதற்காகமுன்மொழியப்பட்டுள்ள பகுதிகள் எவை என்றும், அவற்றின் தற்போதைய நிலை என்னஎன்றும் அவர் அமைச்சரிடம் விளக்கம் கோரினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் தொகை, நகரமயமாக்கல்,
பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகள்
ஆகியவற்றுக்கு ஏற்ப உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்த வேண்டிய தேவைகாணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, இந்தப் பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துவதுதொடர்பில் அரசாங்கம் விரிவான கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தலைவர்களின் பங்கேற்பு

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மாநகர சபை
மேயர்கள், நகர சபைத் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதித் தலைவர்கள்
பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் சுற்றறிக்கை எது
என்பதையும் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்விக்குட்படுத்தினார்.

மேலும், குறித்த கூட்டங்களில் மேயர்கள் மற்றும் தவிசாளர்கள் இருவரும்
பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் உள்ளனவா என்றும் அவர் கேட்டார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும்
உறுப்பினர்கள் தங்களுடைய நிர்வாகப் பொறுப்புகளுக்கு ஏற்ப மாவட்ட மற்றும்பிரதேச மட்ட ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளில் உரிய முறையில் பங்கேற்கும்வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பிரஜாசக்தி அமைப்புகளின் பங்கு மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட
சபைகளின் அதிகாரம்

உள்ளூராட்சி மன்ற அபிவிருத்தித் திட்டங்களை அடையாளம் காண்பதற்கும்
அவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் பிரஜாசக்தி அமைப்புகளுக்கு
வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வமான அடிப்படை என்ன என்பதையும் சாணக்கியன்இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள்
புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கான உத்தரவாதம் வழங்கப்படுமா என்றும்,
தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் சட்டவாக்க, ஒழுங்குமுறை,
நிதி மற்றும் நிர்வாக சுயாதீனத்தை வலுப்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள்
மேற்கொள்ளப்படுமா என்றும் அவர் கேட்டார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுடைய பொறுப்புகளுக்கு ஏற்பபோதுமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.தான் முன்வைத்த கேள்விகளின் நோக்கத்தை விளக்கிய சாணக்கியன்இராசமாணிக்கம், உள்ளூராட்சி மன்றக் கூட்டங்கள் நடைபெறும் போது மக்களால்தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும்உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனத்
தெரிவித்தார்.

“பிரஜாசக்தி என்ற ஒரு குழுவின் உறுப்பினர்கள் வந்து மக்களால் தெரிவு
செய்யப்பட்ட உறுப்பினர்களின் பணிகளைச் செய்ய முடியாது” என அவர்
குறிப்பிட்டார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின்
அதிகாரங்களையும் பொறுப்புகளையும் வேறு அமைப்புகள் அல்லது குழுக்கள்
புறக்கணிக்கும் வகையில் செயற்படக் கூடாது என்றும், உள்ளூராட்சி மன்ற
உறுப்பினர்களின் சட்டரீதியான பங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி மன்றங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும்
நிறுவனங்களாக மட்டுமன்றி, உள்ளூர் நிர்வாகம், ஒழுங்குமுறை உருவாக்கம்,
அபிவிருத்தித் திட்டமிடல் மற்றும் மக்களின் ஜனநாயகப் பங்கேற்பை
உறுதிப்படுத்தும் நிறுவனங்களாகவும் செயற்படுகின்றன என்பதை அரசாங்கம்ஏற்றுக்கொண்டு, அவற்றின் சட்டவாக்க, நிர்வாக மற்றும் நிதி சுயாதீனத்தைவலுப்படுத்த வேண்டும் என்பதே தாம் முன்வைத்த கேள்விகளின் முக்கிய நோக்கம்என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

No comments: