News Just In

9/27/2026 02:42:00 PM

கற் சிலையை உடைக்க முடியும் ஆனால் தமிழர்களின் நெஞ்சத்தில் உள்ள உருவத்தை உடைக்க முடியாது - இயக்குனர் டி.ராஜேந்தர்

கற் சிலையை உடைக்க முடியும் ஆனால் தமிழர்களின் நெஞ்சத்தில் உள்ள உருவத்தை உடைக்க முடியாது - இயக்குனர் டி.ராஜேந்தர்




கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருக்கும் தியாக தீபம். அது ஒரு அணையா தீபம். அமர தீபம். அதை என்ன செய்துவிடும் இந்த சிங்களவர்களின் கோபம்.

சிங்கள இனவெறியர்களால் தியாக தீபத்தின் சிலையை உடைக்க முடியும். ஆனால் ஈழத் தமிழர்களின் களங்கமற்ற இதயத்தில் தியாக தீபம் திலீபன் பிடித்த இடத்தினை சிங்கள இனவெறியர்களால் உடைக்கவும் முடியாது, அதை தகர்க்கவும் முடியாது, அதை அகற்றவும் முடியாது என தென்னிந்திய பிரபல திரைப்பட் இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

தியாக திபத்தின் திருவுருவச் சிலையை யாழ்ப்பாணம் பொலிஸார் உடைத்து சென்றமை குறித்து கருது தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவர் அன்று இந்தியாவை நோக்கி முன்வைத்த ஐந்து அம்ச கோரிக்கைகள் தமிழ் மக்கள் உள்ளவரை காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கும். ஆனால் இன்னமும் சிங்களவர்களின் வெறி அடங்கவில்லை.

சிங்களர்களின் அந்த வெறி அடங்காததால் தான் உலகெங்கும் இருக்கின்ற தமிழர்கள் இன்று வரைக்கும் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே தங்களால் முடிந்த அளவு தங்களது கருத்துக்களை பதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றார்கள், தமது கருத்துக்களை பதித்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு கொதிக்கக்கூடிய தமிழர்களில் நானும் ஒருவன் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: