News Just In

9/24/2026 09:31:00 AM

பாராளுமன்றத்தில் இன்று என்ன நடக்கும்?

பாராளுமன்றத்தில் இன்று என்ன நடக்கும்?




22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு திருத்தச் சட்டமூலம் ஆகியவறை இரண்டாம் வாசிப்பிற்கான நாடாளுமன்ற விவாதம் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.

இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதன்படி, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பு (Referendum) தேவையில்லை எனவும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் போதுமானது எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், நீதித்துறை கட்டமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று மற்றும் நாளை (25) இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதோடு, நாளை பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றுக்கு பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் இக்குழு கூடியதுடன், இதன்போது குறித்த சட்டமூலங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் குழுவுக்கு தெளிவுபடுத்தியதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: