News Just In

8/30/2026 06:38:00 AM

நுவரெலியாவில் ரவி கருணாநாயக்க - பெயரை மாற்றிக்கொண்டு அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில்..

நுவரெலியாவில் ரவி கருணாநாயக்க - பெயரை மாற்றிக்கொண்டு அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில்..!


நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியுள்ளது.

பல முறை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தும் அவர் முன்னிலையாகாத காரணத்தினால் அதிகாரிகள் வீட்டிற்கே அவரை தேடிச் சென்றுள்ளனர்.

நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு நேற்று (29) அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் முன்னிலையாக தவறியதால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.

இதேநேரம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் பெயரை மாற்றி தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: