News Just In

7/21/2026 02:34:00 PM

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள், இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் தொழில்நுட்ப அறிக்கை விசேட குழுவிடம் ஒப்படைப்பு

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள், இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் தொழில்நுட்ப அறிக்கை விசேட குழுவிடம் ஒப்படைப்பு



மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை, மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசேட குழுக் கூட்டத்தில், நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் பேரவையின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட அதன் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தேர்தல் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையையும் தேர்தல் முடிவுகளையும் பாதிக்காமல், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப நடைமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 33 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

No comments: