கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் செவ்வாயன்று 14.07.2026 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் பொது நிர்வாகம் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இத்திட்டம் அமுலாகிறது.
3.3 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபைக்குற்பட்ட செல்வா நகர் கிராமத்தில் கிராமிய பாலத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி பணிகளை ஆரம்பித்து வைத்தார்

கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் ஏற்பட்ட இயற்கை இடர்களின்போது பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் முகமாக கிராமிய பாலம் அமைக்கும் திட்டம் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரபு தெரிவித்தார்.கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் துவக்க நிகழ்வில் நிகழ்வில், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி ஸ்ரீநாத்;, ஞானமுத்து சிறிநேசன், மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் றிப்கா சபீன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ரோஹினி விக்னேஸ்வரன் உட்பட சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments: