News Just In

7/13/2026 03:21:00 PM

பொறு நிறுவனங்களின் நிரந்தர நிருவாகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

பொறு நிறுவனங்களின் நிரந்தர நிருவாகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர்ப் பிரதேசத்தில், ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை ஆகியவற்றுக்கான நிரந்தர நிருவாகக் கட்டிடத்தை அமைப்பதற்கு காணித் துண்டொன்று இல்லாதிருந்த நீண்டகாலக் குறைபாட்டுக்கு தற்பொழுது தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்விரு பொது நிறுவனங்களுக்குமாக, நிருவாகக் கட்டித்திற்கான காணி ஏறாவூரின் மூத்த அரசியல் முன்னோடி மர்ஹும் எம்.ஏ.சி. அப்துல் றஹ்மான் சார்பாக அவரது சகோதரர் எம்.ஏ.சி. அப்துல் லத்தீபினால் 10 பேர்ச்சஸ் இடம் வழங்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இவ்விரு பொது நிறுவனங்களுக்குமான நிரந்தர நிருவாகக் கட்டிடம் ஏறாவூர் வாவிக்கரையை அண்டி ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்குப் பின்புறமாக அமைந்துள்ள எம்.ஏ.சி. அப்துல் கரீம் மாவத்தையில் அமையப் பெறவுள்ளது.

கட்டிடத் தொகுதியை நிருமாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான அலிஸாஹிர் மௌலானா, பஷீர்சேகுதாவூத் ஆகியோரும் ஊர்ப்பிரமுகர்களும், சன்மார்க்க அறிஞர்களும், இவ்விரு பொது நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஏறாவூரின் மூத்த அரசியல் முன்னோடி மர்ஹும் எம்.ஏ.சி. அப்துல் றஹ்மான் சார்பில் ஏற்கெனவே, ஏறாவூர் மர்கஸ் மஸ்ஜித் அல் பாக்கியதுஸ் ஸாலிஹாத் அறபுக் கல்லூரிக்கும், ஏறாவூர் மஃஹது நஜ்மில் உலூம் மத்ரசாவுக்குமாக தலா 10 பேர்ச்சஸ் காணி நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: