News Just In

7/10/2026 06:33:00 AM

நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பு...! எழுந்துள்ள அச்சம்!

நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பு...! எழுந்துள்ள அச்சம்



நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான தற்போதைய வான்வழித் தாக்குதல்களால் ஹோர்முஸ் நீரிணையில்கப்பல் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக இலங்கையில் அண்மையில் வழங்கப்பட்ட எரிபொருள் விலைக் குறைப்பு நீண்ட நாட்களுக்கு நீடிக்குமா என்ற பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

இதனால் மீண்டும் விலை உயர்வதற்கான அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகின்றது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) கடந்த ஜூன் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையைக் குறைத்தது.

இதனடிப்படையில் பெட்ரோல் (92 அக்டேன்), ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டு 414 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆ  ட்டோ டீசல், ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டு 382 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் தற்போதைய அமெரிக்க-ஈரான் மோதலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் மீண்டும் எரிபொருள் அதிகரிப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments: