
மொறட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, நேற்று (06) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்கலைக்கழகத்தை இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் அந்தப் பரீட்சைகளில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே பல்கலைக்கழகத்தைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாணவர்களுக்கான விரிவுரைகள் இணையவழியில் தொடர்ந்தும் நடைபெறும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்ட மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
No comments: