News Just In

7/07/2026 03:47:00 PM

மட்டு. சிறையில் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்தஅக்கரைப்பற்று இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு. சிறையில் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்தஅக்கரைப்பற்று  இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி




மட்டக்களப்பு சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (7) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான இன்று (07) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியளவில் குறித்த இளைஞன் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த முயற்சித்த போது படுகாயமடைந்த நிலையில் மட்டு.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மட்டு.தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: