News Just In

7/18/2026 01:56:00 PM

மோதிரத்துடன் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு - இன்றும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

மோதிரத்துடன் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு - இன்றும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!



செம்மணி மனிதப் புதைகுழியில்  நேற்று 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35 ஆவது நாளான நேற்று  வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே 11 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 7 என்புக்கூடுகள் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இவை தவிர, சேதமடைந்த மோதிரம் ஒன்று, விரல் எலும்புடன் கூடிய செப்பிலான மோதிரம் ஒன்று மற்றும் குவியலாக இருந்த இரண்டு தொகுதி என்புக்கூடுகளும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் தற்போதைய மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் என மொத்தம் 89 நாள்கள் கடந்த நிலையில், இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளின் எண்ணிக்கை 431 ஆகும். இதில் 423 என்புக்கூடுகள் இதுவரையில் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள என்புக்கூடுகளை அகழ்ந்து எடுக்கும் பணிகளும், தடயப் பொருள்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments: