News Just In

5/08/2026 04:18:00 PM

காரைதீவு பிரதேச கலாசார அதிகார சபை கூட்டம் : தலைவராக கலைஞர் முன்னாள் காரைதீவு பிரதேச சபை செயலாளர் சி.நாகராசா தெரிவு !

காரைதீவு பிரதேச கலாசார அதிகார சபை கூட்டம் : தலைவராக கலைஞர் முன்னாள் காரைதீவு பிரதேச சபை செயலாளர் சி.நாகராசா தெரிவு !


நூருல் ஹுதா உமர்

கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளரின் ஆலோசனையின் பேரிலும், காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ.அருணன் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். ரின்சான் அவர்களின் அறிவுறுத்தலின்பேரிலும், காரைதீவு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே சுதர்சன் அவர்களின் ஒருங்கிணைப்பில் காரைதீவு பிரதேச கலாசார அதிகார சபை கூட்டம் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது புதிய நிர்வாகத்திற்கான தலைவராக கலைஞர் முன்னாள் காரைதீவு பிரதேச சபை செயலாளர் சி.நாகராசா மற்றும் செயலாளராக ஓய்வுநிலை ஆசிரியை திருமதி புவனேஸ்வரி ஐயகணேஸ் பொருளாளர் முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி அகல்யா கோவி நாத் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவுகள் உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றன.

மேலும், பிரதேசத்தின் கலாசார முன்னேற்றம், பாரம்பரிய கலைகள் வத்ஸர பியவர நிகழ்ச்சி திட்டம் மற்றும் இளைஞர் பங்கேற்பு மற்றும் எதிர்கால கலாசார நிகழ்ச்சிகளை முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

கூட்டத்தில் கலாசாரத் துறையுடன் தொடர்புடைய கலாசார உத்தியோகத்தர், இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், அதிகாரிகள், சமூக பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பட்ட பலரும் கலந்துகொண்டனர். அம்பாறை மாவட்டத்தில் முதலில் காரைதீவில் கலாசார பிரதேச கலாசார அதிகார சபை அமைக்கப்பட்டது

No comments: