News Just In

6/18/2026 02:21:00 PM

உண்மைகளை உலகறியச் செய்வதற்காக பிள்ளையானும் சுரேஷ் சலேயும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும்!

உண்மைகளை உலகறியச் செய்வதற்காக பிள்ளையானும் சுரேஷ் சலேயும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும்.


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தாக்குதல் மூலம் நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களின் உண்மைகளை உலகறியச் செய்வதற்காக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு முகம் கொடுத்து வரும் கிழக்கு மகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானும் முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சலேயும் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகர காந்தி பூங்கா சுற்றுவட்டத்தில் வியாழனன்று 18.06.2026 ஈஸ்டர் தாக்குதல் குறித்த கவன ஈர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தாக்குதலின்போது பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சமாதான ஆர்வலர்கள் மதப் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவன ஈர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டு தேசியத்திற்கும் சர்வதேசத்திற்குமாக கருத்து வெளியிட்ட புஹாரி,

இன்று, ஈஸ்டர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்.

அரசின் நீதி முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

ஊழல்வாதிகளும், அரசியல்வாதிகள் எனக் கூறப்படுபவர்களும், தீவர போக்குள்ள மதத் தலைவர்களுமானவர்களின் தலையீட்டை நாங்கள் எதிர்க்கிறோம்.

இத்தகையோரின் தலையீமுகளைத் தகர்த்தெறிந்து அரசு தாமதமின்றி நீதி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், இனவாதிகளின் அநாவசிய தலையீடு காரணமாக நடைபெற்று வரும் விசாரணைகளை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது என்றும் நாம் ஐக்கியத்தை விரும்பும் மக்கள் சார்பாக வலியுறுத்துகிறோம்.

விசாரணை செயல்முறையைத் திசைதிருப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

தேவையான ஆதாரங்களைச் சேகரித்து, சூத்திரதாரிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தும் வரை சுரேஷ் சாலேயும் பிள்ளையானும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலின்போது உயிர் பிழைத்தவர்களும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் முறையான சிகிச்சையும் ஆதரவும் இன்றி, காயங்கள், மன அதிர்ச்சி மற்றும் உடல் குறைபாடுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் குணமடைவதற்கு அரசாங்கம் வழிவகுக்க வேண்டும்.

விடுவிக்கப்பட்ட முஸ்லிம் கைதிகளுக்கு எதிரான தொடர்ச்சியான சித்திரவதை, அச்சுறுத்தல் மற்றும் பின் தொடர் கண்காணிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், அவர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதியாக, அரசாங்கம் இந்த விசாரணையை முடித்து, நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்து, மேலும் தாமதமின்றி இந்த முன்னாள் அரசு பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

No comments: