News Just In

6/18/2026 02:18:00 PM

கட்டார் சரிட்டி அனுசரணையில் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்கள் அன்பளிப்பு

கட்டார் சரிட்டி அனுசரணையில் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்கள் அன்பளிப்பு


நூருல் ஹுதா உமர்

மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டார் சரிட்டி (Qatar Charity) நிறுவனத்தின் அனுசரணையில் இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்கள் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபீர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது கட்டார் சரிட்டி நிறுவனத்தின் செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எப்.எம். கப்ளீன் கலந்து கொண்டு, இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்களை கல்லூரி அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு சுத்தமான மற்றும் குளிர்ந்த குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த உதவி, பாடசாலை சமூகத்தினரால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. மேலும், இவ்வன்பளிப்பை வழங்கிய கட்டார் சரிட்டி நிறுவனத்திற்கும், இதனைப் பெற்றுக்கொள்வதற்காக முனைப்புடன் செயற்பட்ட திருமதி நசீஹா சஹ்பி அவர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.

இந்த அன்பளிப்பு மாணவர்களின் நலன் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பாக அமையும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments: