மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகத்தின் ஹிழுறியா வித்தியாலய மாணவர்கள், 2025 ஆம் ஆண்டு க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் சிறப்பான வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளனர்.
85 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், அனைவரும் 100% சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளன.
பெறுபேறுகளின் விபரப்படி,
23 மாணவர்கள் 9 A தரப் பெறுபேறுகளைப் பெற்று குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
பெறுபேறுகளின் விபரப்படி,
23 மாணவர்கள் 9 A தரப் பெறுபேறுகளைப் பெற்று குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
மேலும், 3 மாணவர்கள் 8 A, B தரப் பெறுபேறுகளையும், 7 மாணவர்கள் 7 A, 2 B தரப் பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் 3 C, 3 S (M&Tஉட்பட)தரப்பெறுபேறுகளுடன்முழுமையானசித்தியைஉறுதிப்படுத்த
யுள்ளனர்.
இந்த அபார வெற்றி, பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டுப் ஒத்துழைப்பின் பிரதிபலிப்பாகும் எனப் பாராட்டப்படுகிறது. பிரதேச கல்வி வளர்ச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்தச் சாதனை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: