News Just In

4/12/2026 10:16:00 AM

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தலைமையில் மர்ஹூம் கலாபூசணம் சலீம் அவர்களுக்கான நினைவேந்தல் : தமிழ் - முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்பு !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தலைமையில் மர்ஹூம் கலாபூசணம் சலீம் அவர்களுக்கான நினைவேந்தல் : தமிழ் - முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்பு !



நூருல் ஹுதா உமர்

அண்மையில் காலமான கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மர்ஹும் கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, முஸ்லிம் கல்வி சமூக ஆய்வு நிறுவன (MESRO ஶ்ரீலங்கா) ஏற்பாட்டில் அமைப்பின் நிறுவுனரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் தலைமையில் இன்று (11) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹும் கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் பற்றிய நினைவுரைகளை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸீல், சுகாதார சுதேச வைத்தியத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர்
எம்.டி. ஹசன் அலி, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், சம்மாந்துறை பிரதேச சபை பதில் தவிசாளர் வெள்ளையன் வினோகாந், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பி.எம். பைரூஸ், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் மீரா எஸ் இஸ்ஸதீன், மெஸ்ரோ ஸ்ரீலங்காவின் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம். நஸீல், ஓய்வு பெற்ற அதிபர் சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராசா, காத்தான்குடி ஊடக சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.நூர்தீன், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர், கலை இலக்கிய பேரவை தலைவர் பொறியியலாளர் எம். இஸ்மாயில் போன்றோர்களினால் அவரைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுப் பதிவுகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டது

சலீம் அவர்களின் குடும்பம் சார்பில் ஏற்புரையை மர்ஹூம் "கலாபூஷணம்" ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மகன் முறை உறவினரும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான உதவிக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம். றஸீன் நிகழ்த்தியதுடன் துஆ பிராத்தனையை நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் இமாம் ஏ.பி.எம். இப்ராஹீம் (ஹாஸிபி) அவர்கள் நிகழ்த்தினார்.

“அழியாத எழுத்து, மறையாத நினைவு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், சபை நிறைந்த அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், ஊடக அமைப்புக்களின் பிரதானிகள், ஊடக அமைப்புகளின் நிர்வாகிகள், கல்விமான்கள், சமூக பிரமுகர்கள் எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வை சிலோன் டைம்ஸ் நெட்வொர்க் முகாமையாளர் சி.எம்.யூ. தாரீக் தொகுத்து வழங்கினார்.

No comments: