News Just In

4/12/2026 10:19:00 AM

பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா

பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா



பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே 21 மணி நேரம் நடைபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தை, போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டத்தவறிவிட்டதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற அமைதிப்பேச்சுவார்த்தை பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்த அவர் சற்றுமுன்னர் (12) ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்படவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

21 மணி நேரம் நடைபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தை, போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டத்தவறிவிட்டது.தற்போதைய இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற கேள்வி கேள்விக்குறியாகியுள்ளது.

ஈரான் எங்கள் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். அணுசக்தி விவகாரம் போன்ற அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளுக்கு இணங்க ஈரான் தயாராக இல்லை. அமெரிக்கா தனது இறுதி முன்மொழிவை அளித்துவிட்டது.அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்றுக்கொள்வது ஈரானின் கையில்தான் உள்ளது.

ஈரானின் இந்த நிலைப்பாடு, அமெரிக்காவை விட ஈரானுக்குத்தான் அதிக பாதகமான செய்தியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானை விட்டு வெளியேற அமெரிக்கா திட்டம்

இதேவேளை, ஈரானின் அணுசக்தி திறன்களைத் தடுப்பதே ஒரு முதன்மை இலக்கு என்று கூறிய துணை ஜனாதிபதி, அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாததால் பாகிஸ்தானை விட்டு வெளியேற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தானுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

No comments: