NOORUL HUTHA UMAR
நளீர் பவுண்டேஷன் அனுசரணையில் பேரீச்சம்பழம் வழங்கல்
மத்திய முகாம் – சாளம்பைக்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கு ஆயிரம் கிலோ பேரீச்சம்பழம் வழங்கும் நிகழ்வு நளீர் பவுண்டேஷன் அமைப்பின் ஏற்பாட்டில் மத்திய முகாம் மஸ்ஜிதுல் முகம்மதிய்யா ஜும்மா பள்ளிவாசலில் நேற்றுமுந்தினம் நடைபெற்றது.
நளீர் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரான எம்.ஏ. நளீர் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. அவரின் வேண்டுகோளுக்கு அமைவாக சவுதி அரேபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரம் கிலோ பேரீச்சம்பழங்கள் முதற்கட்டமாக மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து சாளம்பைக்கேணி பிரதேசத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இப்பேரீச்சம்பழங்கள் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மத்திய முகாம் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.எஸ்.எம். வசீர், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.கே. அப்துல் சமட் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டன
No comments: