உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மீட்சி காரியாலயத்தில் (08) ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் தெற்காசியாவில் மிக இளைய வயது சுற்றுச்சூழல் விழிப்புணர்வாளர் விருதைப் பெற்றவரும், “மின்மினி மீட்சி” அமைப்பின் ஸ்தாபகருமான இளம் சமூகச் செயற்பாட்டாளர் மின்மினி மின்ஹா சிறப்பாக கௌரவிக்கப்பட்டார். சிலோன் பிரிட்டிஷ் கொலீஜ் ஆஃப் ஸ்ரீலங்கா கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான வி. வினோகாந்த் அவர்களினால் பொன்னாடை போர்த்தி அவருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.
சம்மாந்துறையில் உள்ள மீட்சி காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளம் சாதனையாளர்கள் தொடர்பான சிறப்பு சொற்பொழிவுகள் இடம்பெற்றன. மேலும் பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கலந்து கொண்டு உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கதாகும்
No comments: