News Just In

2/28/2026 06:48:00 AM

தந்தை பொலிஸ் அதிகாரி ; சுற்றிவளைப்பால் அம்பலமான பல்கலைக்கழக மாணவன் செயல்

தந்தை பொலிஸ் அதிகாரி ; சுற்றிவளைப்பால் அம்பலமான பல்கலைக்கழக மாணவன்  செயல்



அம்பலங்கொடை ஹீன் எல பகுதியில் பல்வேறு வகையான போதைப்பொருட்களை வைத்திருந்த தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் அம்பலாங்கொடை, ஹீன் எல வீதியில் வசிக்கும் தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஆவார்

இந்த சந்தேக நபரான மாணவரின் தந்தை பொலிஸ் அதிகாரி என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரிடம் இருந்து 11 கிராம் ஹெராயின், 6 கிராம் ஐஸ் மற்றும் 35 கிராம் ஹஷிஷ் ஆகியவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பலாங்கொடை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த சிறப்புத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: