News Just In

4/09/2026 05:29:00 AM

போர்நிறுத்தத்திற்கு மத்தியில் திடீரெனெ ஹார்முஸில் கப்பல் போக்குவரத்தை நிறுத்திய ஈரான்

போர்நிறுத்தத்திற்கு மத்தியில் திடீரெனெ ஹார்முஸில் கப்பல் போக்குவரத்தை நிறுத்திய ஈரான்


அமெரிக்கா-ஈரான் இடையிலான இரண்டு வார போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மத்தியில், தற்போது திடீரெனெ ஹார்முஸில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் நிறுத்தியுள்ளது.

இஸ்ரேல் லெபனானில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக ஈரான் ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை நிறுத்தியுள்ளதாக ஈரான் அரசின் Fars செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், “இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்துவதால், ஹார்முஸ் கடல்சாலையில் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, அமெரிக்கா-ஈரான் இடையே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததும், இரண்டு எண்ணெய் கப்பல்கள் கடல்சாலையை கடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கியமான பாதையாகும். தினசரி பல எண்ணெய் கப்பல்கள் இங்கு பயணம் செய்கின்றன. இங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விலை மற்றும் வர்த்தகத்தில் பெரிய தாக்கம் ஏற்படும்.

அமெரிக்கா, ஈரான் நடவடிக்கை குறித்து “இது தவறான தகவல்” என மறுத்துள்ளது. ஆனால், ஈரான் ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. இதனால், போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உலக சந்தைகளில் எண்ணெய் விலை திடீரென எதிகரித்துள்ளது. பங்குச் சந்தைகளும் உயர்வு கண்டன. பல்வேறு நாடுகள் இந்த நிலைமையை கவனித்து வருகின்றன

No comments: