News Just In

5/23/2026 08:53:00 AM

சந்திவெளி - மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில்துவிச்சக்கர வண்டி மீது மோதிய கெப்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

துவிச்சக்கர வண்டி மீது மோதிய கெப்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!




சந்திவெளி - மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று (22) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது கெப் ரக வாகனம் மோதி ஏற்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட இந்த சம்பவம், தற்போது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியும் பிள்ளையும் சந்தேகத்திற்கிடமான முறையில் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்போது, இது சாதாரண விபத்து அல்ல என்றும், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பிச் சென்ற 24 வயதுடைய கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட முரண்பாடே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்

No comments: